மாயூரநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா
ADDED :3850 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் பழையபாளையம் ராஜூக்கள் சார்பில் சித்திரை திருவிழா ஏப்ரல் 13 இரவு 7 மணிக்கு பெரியசாவடி முன் பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. ஏப்ரல் 14 காலை 7.35 மணிக்கு மாயூரநாதசுவாமி கோயிலில் இருந்து நீர்காத்த அய்யனார்சுவாமி தேர் புறப்பட்டு, என்.ஆர்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தை அடைகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் ,இரவு 7 மணிக்கு மின்அலங்கார தேரில், மீண்டும் மாயூரநாதசுவாமி கோயிலுக்கு சுவாமி சென்றடைகிறது. அன்றிரவு 8 மணிக்கு வானவேடிக்கையும் நடக்கிறது. ஏற்பாடுகளை சித்திரை திருவிழா கமிட்டியினர் செய்கின்றனர்.