உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

புதுச்சேரி: வில்லியனுார் மாதா ஆலயத்தின் ௧௩௮வது ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் நாளை (11ம் தேதி) துவங்குகிறது. புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் அமைந்துள்ள லுார்து அன்னை ஆலயத்தில், சேலம் ஆயர் டாக்டர் சிங்கராயர், 138வது ஆண்டு பெருவிழாவை நாளை கொடியேற்றி, துவக்கி வைக்கிறார். நாளை காலை 5.30 மணிக்கு, ஜெபமண்டபத்தில் திருப்பலி நடக்கிறது. இதையடுத்து மாதா குளத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும். திருவிழா நவநாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை 7.30 மணிக்கு, புதுச்சேரி-கடலுார் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி, அன்றிரவு 7.30 மணிக்கு, ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 20ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, வில்லியனுார் ஆலய பாதிரியார் ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர், பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கம், தன்னார்வ பணிக்குழு மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !