உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல் அருங்குணத்தில் கும்பாபிஷேக விழா!

மேல் அருங்குணத்தில் கும்பாபிஷேக விழா!

அவலூர்பேட்டை: மேல்அருங்குணம் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் மேல்அருங்குணம் கிராமத்தில் கெங்கையம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு 9ம் தேதி காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சிலைகள் கரிக்கோலமும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலையும் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, மகா பூர்ணாஹூதியும், கடம்புறப்பாடும் நடந்தது. காலை 10 மணிக்கு கெங்கையம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !