வி.குமாரமங்கலம் காளியம்மன் சித்திரை திருவிழா நாளை துவக்கம்!
ADDED :3847 days ago
கம்மாபுரம்: வி.குமாரமங்கலம் காளியம்மன் கோவில், சித்திரை திருவிழா நாளை துவங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு, நாளை (14ம் தேதி) காலை 7:00 மணியளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தினசரி, காலை 8:00 மணிக்கு வினாயகர், காளியம்மன், முனியப்பர் சுவாமிகளுக்கு சி றப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா, அரிச்சந்திரன் கதைப் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.