தேவாரம் இலவச பயிற்சி ஒப்புவித்தல் போட்டி
ADDED :3841 days ago
மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் தேவாரம் இலவச பயிற்சி, ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக்கு 15 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 7 - 13 வரை, மதுரை தானப்ப முதலி தெரு திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பயிற்சி நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தலைமையாசிரியர் அனுமதி கடிதம் பெற்று விண்ணப்பிக்கலாம். ஒப்புவித்தல் போட்டிக்கு 6, 7 ம் வகுப்பிற்கு 2 திருமுறை பதிகம், 8, 9ம் வகுப்பிற்கு 3 திருமுறை பதிகங்கள் ஒப்புவிக்க வேண்டும். மே 23ல் போட்டி நடக்கிறது. மதுரை மேலமாசி வீதி விவேகானந்தா கம்ப்யூட்டர்ஸில் இலவச தேவார புத்தகம் வழங்கப்படும். தொடர்புக்கு: 94439 30540.