உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி!

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையில், கோயிலுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரத்தில் அதிகாலை 4 முதல் 6 மணி வரை பெய்த பலத்த மழையால், ராமநாதசுவாமி கோயிலில் 1 மற்றும் 2 ம் பிரகாரங்களில் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இவ்வழியாக தீர்த்தக்குளங்களில் நீராடவும், சன்னதியில் சுவாமி தரிசனத்திற்கும் சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும்கோயிலின் உபகோயில்களான தனுஷ்கோடி தேசிய சாலையில் உள்ள லட்சுமணர் கோயில், இதன் தீர்த்த குளத்தை சுற்றிலும் ஒரு அடி உயரத்திற்கு மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நின்றதால், அங்கும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மொத்தம் 13 ஏக்கரில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 3 பிரகாரங்கள் மீது விழும் மழை நீரை, வடக்கு, கிழக்கு வாசல் வழியாக கடலுக்கு கடத்த தனி வாறுகால் வசதி உள்ளது. இதை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாததாலும், அதனுடன் தனியார் லாட்ஜ் உரிமையாளர்கள் கழிவு நீர் குழாய்களை இணைத்ததாலும், வாறுகாலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய கோயில் நிர்வாகம் முன்வராததால், கடந்த 5 ஆண்டுகளாக கோயிலுக்குள் மழை நீர் தேங்கும் அவலம் தொடர்வதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !