ஆலங்குடி குரு பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4196 days ago
திருவாரூர்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவிலில் நேற்று, சி றப்பு வழிபாடு நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்த ஆலங்குடியில், பத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குரு பகவான் பரிகார தலமாக, இக்கோவில் விளங்குகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், குரு பகவான், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.குருபகவானுக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. புதுவருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.