உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம், நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் எழுந்தருளல் நடந்தது. காலை 10:50 மணிக்கு, மிதுன லக்னத்தில், தாயே பராசக்தி என, பக்தர்களின் கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளத்துடன் தேர் வீதியுலா வந்தது. தேர் திருவிழாவில், பக்தர்கள் பாதயாத்திரையாக தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !