உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

திருச்சி: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருவிழா, கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.முன்னதாக காலை, 9 மணிக்கு, அம்மன் உற்சவர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். காலை, 10.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில், நேர்த்தி கடனை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டியுடனும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். மாலை, 5 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.தேரோட்டம் முடிந்ததை அடுத்து, இன்று, 15ம் தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும், நாளை, 16ம் தேதி இரவு, 8 மணிக்கு, காப்பு கலைதல் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !