செல்வ விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம்!
ADDED :3829 days ago
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. ஒன்றிய குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர்கள் குருநாதன், நாகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கவுன்சிலர்கள் சரஸ்வதி, வேலுச்சாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சேதுபதி கலந்து கொண்டனர்.