ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப தெப்பல் உற்சவம்!
திருவெண்ணெய் நல்லூர்: பெரியசெவலை ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீபத்தை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லு õர் அடுத்த பெரியசெவலை பாலஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மலர் தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மற்றும் ஆஞ்சனேயரை வைத்து மூன்று முறை வலம் வரச்செய்தனர். அப்போது திரளான பெண்கள் அகல்களை ஏற்றி குளத்தில் விட்டனர். தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், பாகவத பஜனை கோஷ்டியினரின் கோலாட்டமும் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் சுமூககணபதி மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இதேப்போல் திருவெண் ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 10ம் தேதி அபிஷேகத்துடன் லட்சதீப விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு அலங்கார சேவையும் நேற்று முன்தினம் மாலை 6: 00 மணிக்கு லட்சதீ உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.