உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்: ஆக்கிரமிப்புகள் அகற்றம் துவங்கியது!

சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்: ஆக்கிரமிப்புகள் அகற்றம் துவங்கியது!

சிதம்பரம்: நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம்  நடராஜர் கோவில் கும்பாபி@ஷகம் வரும்  1ம் தேதி நடக்கிறது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக நகராட்சி நிர்வாகம், கல்லு க்கடைச் சந்து, தில்லையம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை நேற்று முதல் கட்டட ஆய்வாளர் அரு ள்செல்வம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி மற்றும்  மேலவீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இதனால் வணிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !