ராமநவமி விழா!
ADDED :3826 days ago
காரைக்குடி : காரைக்குடி ராமநவமி மண்படத்தில் ராமநவமி விழா நடந்தது. உபன்யாசம், இசை நிகழ்ச்சி, பொம்மலாட்டம், நாம சங்கீர்த்தனம் இடம் பெற்றன. சங்கீத வித்வான் கணேஷ் குழுவினரின் திவ்யநாம பஜனை, அஷ்டபதி, சீதா கல்யாணம், வசந்த கேளிகை, பவளிம்பு நிகழ்ச்சி நடந்தது. திருவிடை மருதூர் ப்ரம்மஸ்ரீ குருமூர்த்தி சாஸ்திரிகள் தலைமையில் பாராயணம் நடந்தது. விழா குழு தலைவர் ராம்மோகன், செயலாளர் சங்கரய்யர், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கல்யாண சுந்தரம், பொருளாளர் பாலசந்தர், கமிட்டி உறுப்பினர் தண்டபாணி, ஜெய்சங்கர், கல்யாணம், ஹரே ராமா,சந்திரா, பேராசிரியை மீனாட்சி, சியாமளாதேவி பங்கேற்றனர். ஐந்து லட்சம் ராமநாமம் எழுதியவர்களுக்கு ராமர் பட்டாபிஷேக படங்களை உபன்யாஸகர் பாலாஜி, ஸ்ரீபஞ்சமுக பிரத்யங்கரா தேவி கோயில் ஸ்தாபகர் ஞானதேசிக சுவாமிகள் வழங்கினர்.