முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
உளுந்தூர்பேட்டை: அஜீஸ் நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் புனரவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகரிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 15ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. மறுநாள் காலை 7 மணிக்கு வேத பாராயணம், திருமுறை ஓதுதல், மதியம் 12.30 மணிக்கு 2ம் கால பூஜை ஹோமம் பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு யாக சாலையில் இருந்து கும்பம் புறப்பட்டது. காலை 10.10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு வேளாண் துறை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் ரத்தினசபாபதி, நீர் வடி பகுதி துணை இயக்குநர் ராஜேந்திரன், மா நில திட்ட துணை இயக்குநர் சண்முகம், திருச்சி குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீதர், என்.எல்.சி., மனித வளத்துறை செயல்அலுவலர் முத்து, முதன்மை பொதுமேலாளர் சங்கர், டி.எஸ்.பி., பாண்டியன், ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், வேளாண் உதவி இயக்குநர் கருணாநிதி, இந்து அற நிலையத்துறை ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.