உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை முதல் பிரதோஷம்: பக்தர்கள் தரிசனம்!

சித்திரை முதல் பிரதோஷம்: பக்தர்கள் தரிசனம்!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர், நாகநாதர் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகரர் திரு க்கோவில்களில் சித்திரை மாதம் முதல் பிரதோஷ நிகழ்ச்சியில் ஆயிரகணக் கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் சிவத்தலங்களில் உள்ள நந்தி க்கும் லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாரதனை நடத்தப் படுகிறது. சர்வ பரிகார ஸ்தலமான திருவாரூர் தியாகராஜர் மற்றும் நாகதோஷம் தீர்க்கும் கமலாயக்குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவிலுக்கும் பக்தர்கள் அதிளவில் வந்து செல்கின்றனர்.  நேற்று சித்திரை மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகள வி ல்வந்தனர். கோவிலுக்கு செல்லும் வகையில்  படகுவசதி செய்யப்பட்டிரு ந்தது.  பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்த னர். விழா ஏற்பாடுகளை சிவத்தொண்டு அமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திரு ந்தனர். இதே போன்று விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நடந்த அபி ஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர். ஏற்பாடுகளை சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகர் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !