வடபழனி முருகன் கோவிலில் மேற்கூரை அமைப்பு!
ADDED :3823 days ago
வடபழனி: வடபழனி முருகன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்படுகிறது.வடபழனி முருகன் கோவிலுக்கு, தினசரி ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக, விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். கூட்டம் அதிகமாகும்போது, பக்தர்கள் வெளியே காத்திருக்கும் நிலை இருந்தது. பக்தர்களின் வசதிக்காக, நிரந்தர மேற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 31 லட்சம் ரூபாய் செலவில், மேற்கூரை அமைக்கும் பணிகள், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது.கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், மேற்கூரை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே முதல் வாரத்தில் பணிகள் முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டது.