உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா உற்சவம்

மாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா உற்சவம்

முசிறி: முசிறியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடந்தது. முசிறியில் உள்ள மேலத்தெரு, கள்ளர் தெரு, பாலத்து மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், 43ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த, 11ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, பக்தர்களால காவிரி ஆற்றிலிருந்து தீர்க்க குடம் எடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூந்தட்டுகள் ஏந்தி வந்து, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !