உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் சத்ய சாய்பாபா ரத உற்சவம்

பகவான் சத்ய சாய்பாபா ரத உற்சவம்

கோவை : கோவை மாவட்ட சத்யசாய் சேவா நிறுவனங்களின் சார்பில், பகவான் சத்ய சாய்பாபா ரத உற்சவம் நேற்று நடந்தது. பகவான் சத்ய சாய்பாபாவின், 90வது பிறந்த தினம் இந்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.வரும் ஏப்., 24ல் நடக்கும் நான்காவது மகா ஆராதனை விழாவை முன்னிட்டு, கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சத்ய சாய் சேவா சமிதி சார்பில், நேற்று ரத உற்சவம் நடந்தது. கோவையில் செயல்படும், 17 சமிதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த ரத உற்சவத்தில் பங்கேற்றனர்.ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் துவங்கிய ரதோற்சவம், ஒலம்பஸ், சுங்கம் சந்திப்பு, புலியகுளம் வழியாக மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. மகா ஆராதனை விழா கடந்த, 18ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஆராதனை நடந்து வருவதாக, சத்யசாய் சேவா நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !