அழகர் கோவிலில் சித்திரை திருவிழா!
ADDED :3827 days ago
புதுச்சேரி: புதுச்சேரி– கடலுார் எல்லை பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் சித்தர் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. திருமண வரம் குழந்தை பாக்கியம் உட்பட பல வேண்டுதலுக்கு சிமென்ட் பொம்மைகளை வைத்து ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்கனவே பொம்மைகள் செய்து வைத்தவர்கள், அவற்றை புதுப்பித்து வழிபட்டனர். அழகர் கோவிலின் பின்புறம் அழகர் சித்தர் கோவில் உள்ளது. 366 ஆண்டுக்கு முன்பு இக்கிராமத்திற்கு வந்த சித்தர், இப்பகுதி மக்களின் நோய்களை குணமாக்கியுள்ளார். இவர் அங்குள்ள கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அக்கிணற்றின் மேல் சித்தருக்கு அமைத்துள்ள சிறிய கோவிலில், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. 100 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள், ஒரே நேரத்தில், இறைவனை வேண்டி வாசித்தனர்.