ஆஞ்சநேயர் கோவில் தெப்பல் உற்சவம்!
ADDED :4153 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழாவையொட்டி, தெப்பல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று லட்சதீபம் திருவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தெப்பல் உற்சவம் நடந்தது. ÷ காவில் குளத்தில் இரவு 12 மணிக்கு ராமர், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் பட்டாபிஷேக அலங்காரத்தில் குளத்தை சுற்றி தெப்பல் உற்சவம் நடந்தது. இதையொட்டி வான வேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது.