உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுதொண்டர் அமுது படையல் விழா!

ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுதொண்டர் அமுது படையல் விழா!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுதொண்டர் அமுது படையல்   விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதி செங்குந்தர் பொதுமக்களால்  ஆண்டுதோறும் சிறுதொண்டர் அமுது படையல் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அமுது படையலை முன்னிட்டு சீராளன் ருத்ராபதீஸ்வரர் புறப்பாடு நகரின் நான்கு வீதிகள் வழியாக நடந்தது.  மாலை சிறுதொண்டர் வரலாற்று நாடகம் செல்வ மகா கணபதி கோவிலில்  நடந்தது. பின்னர் சிறப்பு அர்ச்சனை நடந்தது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் சீராளன் பிரசாதம் வாங்கி சென்றனர்.

சிறுபாக்கம்: செங்குந்தர் மட வளாகம் சார்பில் அன்னப் படையல் என்கிற அமுதுபடையல் திருவிழாவையொட்டி,  நேற்று முன்தினம் பிச்சாண்டவர்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை செங்குந்தர் மட வளாகத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !