கோவில் திருவிழா!
ADDED :3926 days ago
துறையூர்:துறையூர் தியாகி சிங்கார வேலர் தெருவில் எழுந்தருளியுள்ள மாரியம்மனுக்கு, 46வது
ஆண்டு கஞ்சி வழங்கும் விழா நடந்தது.கடந்த, 17ம் தேதி முகூர்த்த கால் நட்டு, விழா
துவங்கியது. கடந்த, 19ம் தேதி, ஆண்டாள் அம்மன் தெருவிலுள்ள ஆதிபராதி கோவிலிலிருந்து
பால்குடம், தீர்த்த குடம் பக்தர்கள் எடுத்து சக்தி அழைத்து வந்தனர். மதியம் அம்மனுக்கு
அபிஷேக ஆராதனைகள் செய்து கஞ்சி வழங்கினர். இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்
செய்து மாவிளக்கு, கும்ப பூஜை செய்து வழிபட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.