உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எடுத்தவாய்நத்தம் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நிறுத்தம்!

எடுத்தவாய்நத்தம் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நிறுத்தம்!

கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் இன்று நடக்க இருந்த புதிய தேர்
வெள்ளோட்டம், இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நிறுத்தப்பட்டது. கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் அமைக்கப்பட்டது. புதிய தேர் வெள்ளளோட்டம் இன்று நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையே புதிய தேர் செல்லும் தெருக்கள் தேர்வு செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தகவலறிந்த சின்னசேலம் தாசில்தார் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் நேற்று நேரில் சென்று, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சமாதானம் ஏற்படாததால், இன்று நடக்கவிருந்த புதிய தேர் வெள்ளோட்டம்
நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !