பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4020 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருத்தேர் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி கடந்த 20ம் தேதி இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்தது. பின்னர் பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.