நடன பாதேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3819 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆனந்த காலபைரவருக்கு சிற ப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அட்சய திருதியை முன்னிட்டு காலபைரவருக்கு நாணயங்களால் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு செல்வம் பெருக நாணயங்களை பிரசாதமாக வழங்கினர். காலபைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.