சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!
ADDED :5223 days ago
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. இம்மலை மதுரையையும், சாப்டூரையும், விருதுநகரையும் இணைத்தும் உள்ளது. இந்தக்கோயில் முன்பு தனியாரிடமிருந்தது. பின் தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் பல மாநில மக்கள் இங்கே வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறி செல்கின்றனர். இக்கோயிலுக்கு சாப்டூர் வழியாகவும், வத்திராயிருப்பு வழியாகவும் பாதைகள் உள்ளன.இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை தீர்க்கவல்லவை.