நந்தி வாகன விநாயகர்
ADDED :3938 days ago
கோவில்பட்டி அருகே உள்ள முக்கூட்டு மலை அடிவாரத்திலுள்ளவர் கன்னி விநாயகர். இவர் கன்னிப் பெண்களைப் பாதுகாப்பவராக அருள் புரிகிறார். ஒருமுறை இவ்விடத்துக்கு வந்த சப்த கன்னியர் சிவனிடம் இங்கேயே தங்கிக் கொள்வதாக வேண்டினர். ஒப்புக்கொண்ட சிவனும் அவர்களுக்குப் பாதுகாவலராக விநாயகரை நியமித்து, துணைக்கு நந்தியையும் விட்டுச் சென்றார். இதனால், இங்குள்ள விநாயகர் மூஞ்சூறு வாகனம் இன்றி நந்தி வாகனத்துடன் காட்சி தருகிறார். விநாயகர் சன்னிதி அருகில் உள்ள ஏழு கோடுகளை பக்தர்கள் சப்த கன்னியராக வழிபடுகின்றனர்.