உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் தேருக்கு புதிய வடம்!

சிதம்பரம் நடராஜர் கோவில் தேருக்கு புதிய வடம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் புதிய தேருக்கு, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய வடம் உபயமாக வழங்கப் பட்டது. சிதம்பரம் கோவிலில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலிருந்த நடராஜர் தேருக்கு பதிலாக, அப்போதைய சப் கலெக்டர் அரவிந்த், டி.எஸ்.பி.,  ராஜாராம் முயற்சியால், சென்னை பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகம் மூலம் 74 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேருக்கு, 18 அங்குலம் சுற்றளவு, 250 அடி நீளம் கொண்ட 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய வடத்தை, வலசை தொழிலதிபர் பிரம்மநாதன் உபய மாக வழங்கினார். இந்த வடத்தை, கட்டளை தீட்சிதர் தங்கராஜ் தீட்சிதர் மூலம் கோவில் பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வர தீட்சிதரிடம் ஒப் படைத்தார். புதிய தேர் வடத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !