வெங்கடேஸ்வரர் பிரதிஷ்டை: 10ம் ஆண்டு விழா துவக்கம்!
ADDED :3854 days ago
பெங்களூரு: ஹலசூரு கவுதமபுரம், ஸ்ரீமத் நம்வாழ்வார் சன்னிதியில், வெங்கடேஸ்வர சுவாமி பிரதிஷ்டை செய்த, 10ம் ஆண்டு விழா நாளை துவங்குகிறது. நாளை இரவு, 7:00 மணி முதல், 9:00 மணி வரை, ராமானந்த சிவாச்சார்யா சுவாமிகள், பிரசாந்த் சிறப்பு பூஜைகள், ஹோமங்களை நடத்துகின்றனர். வரும், 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு, பக்தர்களின் பக்தி பாடல்கள், 10:30 மணிக்கு வேத பாராயணம், 11:30 மணிக்கு, யோகமூர்த்தி சுவாமிகளின் சொற்பொழிவு நடக்கிறது. பின், மகாமங்களார்த்தி காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.