சிறுதொண்ட நாயனார் கோயிலில் திருஅமுது படையல்!
ADDED :3855 days ago
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் சிறுதொண்ட நாயனார் கோயிலில் திரு அமுதுப் படையல் பெருவிழா நடந்தது. சிவலிங்கத் திருமேணிக்கு அபி÷ஷகம், பேரொளி வழிபாடு நடந்தது. சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், சிறுதொண்டர் சங்கமரை தேடுதல், சங்கமர் பிள்ளை கறி வேண்டுதல், சீராளனை அழைத்தல், திரு அமுது படைத்தல், திருவிளக்கு ஏற்றுதல் நடந்தன. சுவாமி வீதியுலா நடந்தது. கல்மண்டபம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் தரிசனம் செய்தனர்.