உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

திண்டிவனம்: திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவில் பிரம் மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் திந்திரிணீஸ்வரர் மரகதாம்பிகை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. உற்சவர் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, காலை 9:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதா குருக்கள் தலைமையில் பாலாஜி, கணேசன், முகேஷ் குருக்கள்கள் செய்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா காலங்களில் இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக நாளை (25 ம் தேதி) காலை 6:30 மணிக்கு அதிகார நந்தி உற்சவமும், 30ம் தேதி இரவு திருக்கல்யாணமும், மே 1ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !