சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :3854 days ago
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலய சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்பாளும் சுவாமியும் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு கனகசபாபதி சிவாச்சார்யார் கொடியேற்ற வைபவத்தை நடத்தி வைத்தார். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி, தெய்வசிகாமணி பட்டர்,அழகியசுந்தர பட்டர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 30ம் தேதி காலை 10மணிக்கு திருக்கல்யாணம்,மே 1ம் தேதி தேரோட்டம்,மே 4ம் தேதி வீர அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.