உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரத்தில் சூரியபூஜை விழா

திருநாகேஸ்வரத்தில் சூரியபூஜை விழா

கும்பகோணம்: கும்பகோணம் பிரகன்நாயகி உடனாய நாகேசுவரசுவாமி திருக்கோவிலில் மூன்று நாள் சூரியபூஜை, இன்று துவங்குகிறது.திருக்குடந்தை கீழ்க்கோட்டம் என்றும், நாகதோஷ பரிகாரத்தலமாக கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், பிரகன்நாயகி உடனாய நாகேசுவரரை, உலகிற்கு வெளிச்சத்தை அளிக்கும் சூரிய பகவான் வழிபடுவதாக ஐதீகம்.அதன்படி, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில்11ம் தேதி முதல், 13 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள், கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது படுக்கூடும். இன்று காலை 5.45 மணி முதல், 6.30 மணிக்குள் இந்நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து 26ம்தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளது.இதையொட்டி விசேஷ அபிஷேக, ஆராதனை நடைபெற உள்ளது. பக்தர்கள் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !