வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ADDED :3857 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, இன்று காலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் தங்க சப்பரத்தில், காலை 6:30 மணிக்கு வீதி உலா செல்கிறார். தொடர்ந்து, மாலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், வீரராகவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் செய்து வருகிறார்.