உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் வேத பாடசாலையில் சங்கரர்ஜெயந்தி விழா!

சோழவந்தான் வேத பாடசாலையில் சங்கரர்ஜெயந்தி விழா!

சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் மலையாள கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் சங்கரர்ஜெயந்தி விழாவில் உலகநன்மைக்காக சிறப்பு’ஜை நடந்தது.  நேற்று அதிகாலை 6 மணிக்கு பட்டுபல்லக்கில் ஆதிசங்கரர்சுவாமியின் திருவுருபடத்தை வைத்து வீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ருக்மணி,சதயபாமா சமேத சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் முன்பு வந்த பல்லக்கிற்கு அக்ரஹார பக்தர்கள், பெண்கள் மலர்களை துõவி வரவேற்று, பூஜை செய்து பிரசாதம் பெற்றனர். பின்னர் வேதபாடசாலையில் குருஜிவரதராஜ்பண்டிட் தலைமையில் மழைவேண்டி,உலகநன்மைக்காக ஸ்ரீசங்கரர்சுவாமிக்கு, சிவலிங்கத்திற்கு விற்பன்னர்கள் வேதபாராயணம் பாட பல்வேறு அபிஷேக,தீபாராதனைகள் சிறப்புபூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !