சிறப்பு அலங்காரத்தில் வீரட்டானேஸ்வரர்!
ADDED :3920 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்த மண்டபத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திரிபுர சம்ஹாரமூர்த்தி (வீரட்டானேஸ்வரர்), திரிபுரநாயகி (அம்பாள் பெரியநாயகி) உற்சவர் சுவாமிகள் கோவிலின்வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறும்வசந்த உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 6:00 மணிக்குஅபிஷேகம், 8:00 மணிக்கு தீபாராதனையும், 8:30 மணிக்கு உள்புறப்பாடும் நடந்தது.
விழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி வரை தினமும் மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது.