மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3790 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3790 days ago
நெல்லிக்குப்பம்: கடலூர் அடுத்த கோண்டூர் பாரத் நகர் குபேர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நேற்று (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதனையடுத்து 9:30 மணிக்கு கடம் புறப்படாகி 9:45 மணிக்கு ஒரே சமயத்தில் குபேர விநாயகர், துர்க்கை அம்மன், தட்சணாமூர்த்தி, நவக்கிரக கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பூஜைகளை கைலாச சிவாச்சாரியார், மோகனசுந்தரசிவம் தலைமையில் செய்திருந்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அதே போன்று நெல்லிக்குப்பம், வான்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 7:00 மணிக்குமுதல் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து நேற்று (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜையும், அதனையடுத்து 9:30மணிக்குகடம்புறப்பாடாகிகோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதி யுலா நடந்தது. பூஜைகளை சுந்தரேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் செய்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு கும்பாபிஷேக விழாவிலும்ரமணர் அன்னதான குழுவினர் அன்னதானம் வழங்கினர்.
3790 days ago
3790 days ago