திருப்பரங்குன்றம் ஸ்தானிக பபட்டர்களை கோயில் அதிகாரிகள் மிரட்டுகின்றனர் கிராமத்தினர் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்றியது சம்பந்தமான பிரச்சனையில் சாணிக்கப்பட்டவர்களை கோயில் அதிகாரிகள் மிரட்டுவதாக குன்றத்து கிராமத்தினர் குற்றம் சுமத்தினர்.
கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சரவணன், சரவணகுமார், வெற்றிவேல்முருகன், ராஜேஸ்வரன், அருண் ஆகியோர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத திருவிழாவில் நவ. 24ல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒரு நாள் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அன்றைய தினம் கோயில் சார்பில் ஒரு விளக்கம் அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கு கூறப்பட்ட காரணங்களில் ஒன்றாக ஸ்தானிக பட்டர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுபட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு சுப்ரமணிய சுவாமி கோயில் ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்பிரமணியன் சொக்கு சுப்பிரமணியன் ஷண்முகசுந்தரம் ஆகியோர், கோயில் துணை கமிஷனர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்களுக்கு எழுதிய கடிதத்தில், கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஒரு அறிக்கை கடிதத்தை நமது திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம். நாங்கள் திருக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோயிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மலை மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மன வேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்ட உள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஸ்தானிய பட்டர் சுவாமிநாதன் வீட்டில் கோயில் துணை கமிஷனர் செல்வி, கண்காணிப்பாளர் ரஞ்சனி, எழுத்தர் மணிமாறன், அறங்காவலர் குழு தலைவர் சண்முகசுந்தரம், மேலும் பெயர் தெரியாத ஒரு அறங்காவலரும் ஸ்தானிக பட்டர்களை மிரட்டி அவர்கள் வெளியிட்ட கடிதத்திற்கு மறுப்பு கடிதம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்தோம். இதை விசாரிப்பதற்காக சுவாமிநாதன் பட்டர் வீட்டுக்கு உள்ளே சென்ற பொழுது, வீட்டினுள் பட்டார்கள் அறங்காவலர் குழு தலைவர் சண்முகசுந்தரம், கோயில் துணை கமிஷனர் செல்வி, கண்காணிப்பாளர் ரஞ்சனி, எழுத்தர் மணிமாறன் இருந்தனர். ரகசிய கூட்டம் நடத்துகிறீர்களா, அலுவலகம் சம்பந்தமான விஷயமாக இருந்தால் கோயில் அலுவலகத்திலேயே பேசிக் கொள்ளலாமே என கேட்டோம். அப்போது அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர், துணை கமிஷனர், காணிப்பாளர் எழுத்தர் ஆகியோர் பட்டர் வீட்டின் உள்ளே சென்று விட்டனர். சுவாமிநாத பட்டர் எங்களிடம் கூறும்போது, அவர்கள் எங்களது விருந்தாளியாக வந்துள்ளனர் என தெரிவித்தார். நாங்கள் போலீசார் மூலம் வெளியேற்றப்பட்டோம் என்றனர். சாமிநாதன் பட்டர் வீட்டு முன்பு அவர்கள் நின்றிருந்த போது போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 15 நிமிடங்களுக்கு கழித்து துணை கமிஷனர், கண்காணிப்பாளர், எழுத்தர், சுவாமிநாத பட்டர் வீட்டில் இருந்து வெளியே சென்றனர்.