உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜபெருமாள் கோவில்மகா கும்பாபிஷேகம்!

வரதராஜபெருமாள் கோவில்மகா கும்பாபிஷேகம்!

கண்டமங்கலம்:வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் வரதஜராஜபெருமாள், ரங்கநாதப்பெருமாள், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் ஊராட்சி, வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் வரதராஜபெருமாள், ரங்கநாதப்பெருமாள், முத்துமாரியம்மன் மற்றும் சென்னுார் அய்யனாரப்பன் கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சொந்த செலவில் புதுப்பித்தார்.இக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி காலை 7 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை ஹோமங்கள், மாலை 5 மணிக்கு கோமாதா பூஜை, 17 கலச திருமஞ்சனம், 6ம் கால யாகசாலை ஹோமங்கள் நடந்தது. 22ம் தேதி காலை 5.50 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை, தத்வந்தயாசம், 7ம் கால யாகசாலை ஹோமங்கள், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.16 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடும் நடந்தது. 9.36 மணிக்கு பாஞ்சராத்ர ஆகம வித்வான் தேரழுந்துார் கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலையில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.கோபுரங்களுக்கு நன்னீராட்டு விழா நடந்த போது வானில் பறந்தபடி ஹெலிகாப்டரில் பூ துாவினர். பக்தர்கள் மீது தீயணைப்பு வீரர்கள் புனித நீரை பீச்சியடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !