உலகவாழியம்மன்செடல் உற்சவம்!
ADDED :3832 days ago
புதுச்சேரி:அரியூர் சுந்தர விநாயகர், உலகவாழியம்மன், அய்யனார், உருவகத்தம்மன் சப்த கன்னிகா கோவில் திருத்தேர் மற்றும செடல் உற்சவம் வரும் 1ம் தேதி நடக்கிறது.
விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 1ம் தேதி உலகவாழியம்மன் தேர் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி தெப்பத்திருவிழா, 3ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.