உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம அனுமான் கோவிலில் ராமானுஜர் பிறந்தநாள் விழா!

ராம அனுமான் கோவிலில் ராமானுஜர் பிறந்தநாள் விழா!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ராம அனுமான் கோவிலில், ராமானுஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் ராம அனுமான் கோவில் வளாகத்தில் உள்ள ராமானுஜருக்கு பிறந்த நாள் விழா நடந்தது. அதையொட்டி ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனையும் நடந்து. தொடர்ந்து ராமானுஜரின் பெருமைகள் குறித்து பேராசிரியர் கோகுலாச்சாரியார் பேசினார். விவசாய சங்க தலைவர் விஜயகுமார், நடனம், செந்தமிழ்செல்வி ராமதாஸ், ராமலிங்கம், நாகராஜ், பூபாலன், சுகுமார், லட்சுமணன், பரமசிவம், தாரன ஆனந்த், ராம பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !