உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரநாராயண பெருமாள் கோவிலில்சித்திரை திருவிழா துவங்கியது !

வீரநாராயண பெருமாள் கோவிலில்சித்திரை திருவிழா துவங்கியது !

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காட்டுமன்னார்கோவிலில்  உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா பிரம்மோற்சவ விழா நேற்று காலை 9.30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது.  அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. வரும் 29ம் தேதி இரவு கருட சேவையும்,  2ம் தேதி மாலை திருக்கல்யாணமும், இரவு புஷ்பபல்லாக்கும், 4ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெ ங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தோத்தாத்ரி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !