உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் கோவிலில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா!

தியாகராஜர் கோவிலில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் நடந்த, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில், ஏராளமான இசை கலைஞர்கள் பங்கேற்று, நேற்று பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்தனர். திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தியாகபிரும்மம், முத்துசுவாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரி ஆகியோரின் ஜெயந்தி இசை விழா, திருவாரூர் தியாகராஜர் கோவில், கமலாம்பாள் சன்னிதி அருகே, சில தினங்களுக்கு முன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு தியாகராஜர் திருஉருவ படத்தை அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலையில் பல்வேறு குழுவினரின் நாதஸ்வர இசை நடந்தது. காலை, 9:00 மணிக்கு பிரபல வித்வான்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி துவங்கியது. மாலை, 6:30 மணி வரை, பல்வேறு இசை கலைஞர்கள் பங்கேற்று, இசையால் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !