உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி தரும் வெள்ளிக்கிழமை விரதம்!

வெற்றி தரும் வெள்ளிக்கிழமை விரதம்!

புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன், கோரன் என்னும் அசுரனிடம் நாட்டை இழந்தான். அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் சரணடைந்த பகீரதன் நாட்டை மீட்க வழி கேட்டான். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதமிருந்து, முருகனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும், என்றார்  சுக்கிராச்சாரியார். அதன்படி விரதமிருந்த பகீரதன், கோரனுடன் போர் புரிந்து நாட்டைத் திரும்பப் பெற்றான். தேனூர் வரகவி சொக்கலிங்கனார் இயற்றிய சேய்த்தொண்டர் புராணத்தில் இந்த வரலாறு உள்ளது. இழந்த செல்வம் கிடைக்க   விரதமிருந்தால் முருகன் அருளால் வெற்றி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !