உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், சுதந்திராபுரத்தில் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 14ம் தேதி இக்கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது. 21ம் தேதி கம்பம் நட்டு, எட்டு நாட்களுக்கு, தினமும் சிறப்பு பூஜையும், அபிஷேகமும் செய்யப்பட்டன. 28ம் தேதி, 16 அடி நீளம், 3 அடி அகலத்தில் குண்டம் அமைத்து, விறகுகள் அடுக்கி தீ வளர்க்கப்பட்டது. நேற்று காலை பவானி ஆற்றிலிருந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை, 6:00 மணிக்கு கோவில் தலைமை பூசாரி அங்கமுத்து, பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.மதியம் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இன்று மாலை, அம்மன் சுவாமி திருவீதி உலாவும், நாளை மஞ்சள் நீராட்டும், 5ம் தேதி மறுபூஜையும் நடக்க உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !