உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பஜகோவிந்தம் நாடகம்!

சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பஜகோவிந்தம் நாடகம்!

சென்னை :சங்கர ஜெயந்தியை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற நாடகத்தை பார்த்த ரசிகர்கள், நாடக குழுவினரின் கூடவே இணைந்து பஜகோவிந்தம் பாடலை பாடி ஆர்ப்பரித்தனர்.தி.நகர், ஸ்ரீகிருஷ்ண கான சபாவில், சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, பாம்பே ஞானம் இயக்கத்தில், அவரது, நாடக குழுவினர் பஜ கோவிந்தம் என்ற நாடகத்தை அரங்கேற்றினர். அதில், ஆதி சங்கரர், கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தது முதல் வாரணாசியில் அருள்புரிவது வரை உள்ள, வாழ்க்கை சம்பவங்களை சுவைபட நடித்து காட்டினர். நாடகத்தின் இடை இடையே, காஞ்சி பெரியவரின், வாழ்க்கை சம்பவங்களும் இடம் பெற்றிருந்தன. நாடகத்தில், பஜகோவிந்தம் பாடல் அடிக்கடி பாடப்பட்டது. அப்போதெல்லாம் ரசிகர்களும் கூடவே பாடி ஆர்ப்பரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !