சோழவந்தான் மண்ணாடிமங்கலத்தில் மீனாட்சி திருக்கல்யாணம்!
ADDED :3920 days ago
மண்ணாடிமங்கலம்: சோழவந்தான், மண்ணாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இக்கோயிலில் சித்திரை திருவிழா 9 நாட்களாக நடக்கிறது. காலை 6 மணிக்கு மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர்சுவாமி பட்டுசப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சிக்கு பின்னர் கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். பெண்கள் திருமண சீர்வரிசை சுமந்து ஊர்வலமாக கோயில் வந்தனர். அங்கு பிரசாந்த் பட்டர் மாப்பிள்ளைவீட்டாராகவும், கணேசபட்டர் பெண்வீட்டாராகவும் இருந்து மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தினர். பக்தர்கள் சுவாமியை தரிசித்து அருள்பெற்றனர். விழா கமிட்டியினர் சார்பில் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஆலயஊழியர் வெங்கடேஷன் செய்திருந்தனர்.