உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஊர்வலம்!

தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஊர்வலம்!

குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், 8ம் ஆண்டு உற்சவ விழா விமரிசையாக நடந்தது.

குன்னுார் தந்திமாரியம் மன் கோவில் தேர் திருவிழாவில், சந்திரா காலனி ஊர் பொதுமக்கள் சார்பில், நடந்த திருவிழாவில், கரோலினா மாகாளியம்மன் கோவிலில் இருந்து மங்கள வாத்தியம், நையாண்டி மேளம், புலி நடனம், அர்ஜுண நிர்த்தம், நாதஸ்வர இசை, கொட்டும் முரசு, தப்பாட்டம் ஆகியவற்றுடன் அபிஷேக பொருட் கள், தீர்த்தகுட ஊர்வ லம் , தந்திமாரியம்மன் கோவிலை அடைந்தது. காலை, 11:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை, வாண வேடிக்கை பார்வையாளர்களை கவர்ந்தது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !