உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சக்கம்பை மானிஹாடா கோவில் பூ குண்டம் திருவிழா!

மஞ்சக்கம்பை மானிஹாடா கோவில் பூ குண்டம் திருவிழா!

மஞ்சூர்: மஞ்சக்கம்பை மானிஹாடா எத்தையம்மன் கோவிலில், 43ம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பூ குண்டம் இறங்கினர்.

மஞ்சூர் அடுத்துள்ள மானிஹாடா, மகா சக்தி எத்தையம்மன் மற்றும் சத்திய நாகராஜர் திருக்கோவிலின், 43ம் ஆண்டு பூ குண்டம் நிகழ்ச்சியையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல் இரவு,9:00 மணி வரை வாஸ்து சாந்தி கணபதி ஹோமம், இரவு, 9:00 மணி முதல் இரவு,12:00 மணி வரை தாரை தப்பட்டயை முழங்க அம்மன் ஆவாஹன நிகழ்ச்சிகள் நடந்தது.

1.5.2015 அதிகாலை ஒரு மணி முதல், 5:00 மணி வரை அகண்ட நாம பஜனை, கணபதி சுவாமி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:40 மணி முதல், 10:50 மணி வரை சுப மங்கள கொடியேற்றுதல்; நிகழ்ச்சியையொட்டி எத்தையம்மன் வெண்ணிறக் கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.

பகல், 1:00 மணி முதல், 5:00 மணி வரை அன்னதானம் நடந்தது. பகல், 3:00 மணிக்கு நடந்த பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தில் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று காலை,10:00 மணி முதல், பகல் 3:00 மணி வரை மறு பூஜை, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !