உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

விழுப்புரம்: விழுப்புரம் ஏழைமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு ஏழைமுத்து  மாரியம்மன் கோவிலில் சித்திரை முதல் வெள்ளி சாகை வார்த்தல் உற்சவ விழா நடந்தது.  விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 9:00 மணிக்கு  கரகம் ஜோடித்து புறப்பாடு, மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஏழை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்  பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !